Saturday, March 3, 2012

உணர்வுகள்...




அருகில் நீ இருந்தும் உன் அருமை அறியாது உன் உள்ளம் உடைத்தேன்
உணர்வுகள் உள்ளத்தை வழிநடத்த ஊனமுர்றேன் உள்ளத்தால்..
உணர்ந்தெளுந்த போது நீ இல்லை என் சுற்றத்தால்..


அனுபவம் அறிவில் அடிக்க..
இருதயம் துடிக்க..
இரத்தம் கொதிக்க..
மனசாட்சி நெருக்க..
அறிந்து கொண்டேன்...

எந்த உறவும் பிறியும் போதுதான் வலிக்கும்..


பிறியமுன் பிரியமுடன் நான் இல்லை..
பிரிந்து செல்ல வழியும் இல்லை..
என் உடலில் உயிரும் இல்லை..

-நீ இன்றித் தவிக்கும் உன் இதயம் -

NifTy Creations

Feelings..

Sunday, October 23, 2011

துன்பத்திலோர் துன்பம்...

காற்றடிக்கும் காலமெல்லாம் ...
காணல் நீர் காணக் கண்டான்...
பாலை எனும் மண்ணினிலே...
மாலை வரும் வேளை கண்டு...
மண்டியிட்டு அழுதவனுக்கு மணல் பாம்பு தீண்ட...
அழுதவன் ஓடோடிச்சென்றான் உதவி தேடி...
அங்கோர் தொலை தூரத்தே கண்ணுற்றான்... ஒரு மனிதன்...
துன்பத்திலும் ஓர் இன்பமோ என்றெண்ணி அவனை அழைக்க...
வந்தவனோ பாதகனாம்... பாவி இவன் உடமைதனை பாசமின்றிப் பறித்துச் செல்ல...
அந்தோ பரிதாபம்...
இவன் நிலைதனை என்னவென்று சொல்ல....


-நிப்ராஸ் முஹம்மட்.

6th Element of NATURE

In a lovely dusk…
When the golden rays of the sun caress the deep blue sea…,
I was sitting by the reef… admiring the beauty of the nature which is the greatest blessings of God,
In my loneliness, I felt, the sounds of the voiceless waves are trying to murmur something in my ears,
And some verses arose inside me…
now i give life 2 those verses in a form of a poem….

Five elements in Nature
which we all know..
But why are they parted?
Are they because, we, human beings have five senses & sensory organs?
"Earth, water, wind, sky & fire"
where is the other one?
Is it because of its disappearance
that our forefathers totally ignored it in the past?

Yes... It is "Plants"!
Whenever we think about Nature,
It flashes through our mind the “Greenery plants”.
Who will object
to admire the evening sky
while sitting beneath the trees with the embrace of soft breeze
in a chilly river bank...?
Nature cannot be Nature without plants!
Because they are the beautifiers of Mother Nature.

We say
"the wrath of five elements ends up in natural calamities"
But we are not willing to understand
The cry of Mother Nature causes it.

When the earth becomes impatient…
It expresses its helplessness in the form of "Earth quake".
The rage of water expressed by "Tsunami” and "Inundation"
The outburst of the wind is "cyclone"
The weeping of the sky is "Thunder"
The most dangerous form of devastation is caused by fire,
This would not leave anything,
Even the remains…

Have we ever thought about another form of Natural disaster these days?
Which is a challenge to nature…
And forms nature as a challenge is… "Devastation of plants"

One of the bitter truths accepted by the science is "Global warming"
But, what causes it? The answer is "deforestation"

The main reason being deforestation
Not just vanishing the woods but the whole earth.

Have we ever known even the wildest animals to destroy nature?
Are we the six sensed creatures wilder than them?

Devastating the forest…
Capturing the land…
Striking the sky…
Burning… and polluting the air…
How can we call ‘us’ as “Human” who change the atmosphere of our ecological community?
What have we done in return to our mother nature who grew us?

Saying that there are so many Gods in the Nature for human to worship …
Does Human behave with good manner to be worshipped by the Nature??

Let it be the beginning of our thinking… even though this is the end of my words…


Thank you…


By: Ismalebbe Mohamed Nifraas
Faculty of Engineering,
University of Peradeniya,
Srilanka.
+94-75-5483188
nifraas@yahoo.com


Nifty creations©

பொன் விகிதமும் அல்லாஹ்வின் தனித்துவத் தன்மையும்.

(GOLDEN RATIO & THE UNIQUENESS OF ALLAH)





இயற்கை ( THE NATURE )


அந்தி மறையும் ஆனந்த வேளை...
ஆகயச் சூரியன் ஆழ்கடல் மீது செங்கதிர்களால் ஸ்பரிசம் செய்ய...
கடற்கரை தனில் நானும் தனிமையில்...
இறைவன் தந்த அருட்கொடையாம் இயற்கையை
(இ)ரசித்தவனாக இருக்கும் வேளை...
கரையை மோதும் கடல் அலைகளின் ஓசை என் காதோரம் ஏதோ சொல்ல முற்படுவது  போல் தோன்ற...
என்னுள் உதித்தன சில வரிகள்...
தருகிறேன் கவிதை துளிகளாய்...


ஐம் பெரும் பூதங்கள்...
அறிவோம் நாம் யாவரும்...
ஐந்தென அவற்றை பிரிக்கக் காரணம்?
(ஐம்) பொறிகளும், புலன்களும் மானிடராம் நமக்குண்டு என்பதாலா?
“நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ”
எங்கே இன்னுமொன்று?
அது அழிந்து கொண்டு வருவதனாலா
அன்றே நம் முன்னோர் அதை கண்டு கொள்ளவில்லை?

அதுதான் “தாவரம்”
இயற்கை என்றாலோ நம் கண் முன் நிற்பவை...
பச்சை பசேல் என பளிச்சிடும் தாவரங்கள் தானே..



குளிர்ச்சியான ஆற்றங்கரையோரத்திலே...
இதமான தென்றல் காற்று வீச...
மரச் சோலையின்கீழ் சேலை விரித்து இளைப்பாரி...
அந்தி வானை ரசிக்க யாருக்குத்தான் ஆசையில்லை?...

தாவரங்கள் இன்றி இயற்கை ஒரு போதும் இயற்கையாக இருக்காது.
இயற்கைக்கு அழகு சேர்ப்பதே தாவரங்கள் தானே...

வறண்ட பாலை மண்ணை பார்த்து “அழகிய இயற்கை நிலம்” என்று கூறுவது அரிது...
நடுக்கடலிலே...
சுற்றும் முற்றும் நீர் சூழ்ந்திருக்க...
இயற்கையை நாம் ரசிப்பதரிது...
உலர்ந்த காற்று உஷ்ணமாய் உடம்பில் படும் போது...
காற்றை ரசிப்பதரிது...
பகல் பொழுதிலே.. சுட்டெரிக்கும் சூரியன் சுடரொளி வீசும் போது...
வானத்தின் அழகை ரசிப்பதரிது...
தீ என்றாலே சற்று தூரநின்ருதான் பார்க்கும் நாம் அதை இயற்கை என ஒப்புக்கொண்டதும் அரிது...
  

ஐம் பூதங்களில் அப்படி என்னதான் விஷேசம்... அவற்றின் பேரில் பூதம் சேர்ந்திருக்க?...
சற்று சிந்திக்க....
இவை இல்லாதவிடத்து, எதுவுமே வாழ முடியாது என்பது தெளிவு...
இவை மிகைக்குமிடத்து எல்லாமே “அழிவு” என்பதும் அறிவு...
இது அனுபவம் தந்த முடிவு...
“இயற்கை அனர்த்தங்கள்” ஐம் பூதங்களின் சீற்றமே என்பார்கள்...
இயற்கையின் அழுகைதான் அனர்த்தமாய் வெடிக்கிறது என்பதை அறியாதோர்...

பூமி பொறுமையிழந்தால் “நில நடுக்கம்”
நீர் பொங்கி எழுந்தால் “சுனாமி” மற்றும் “வெள்ளம்”
காற்றின் அத்துமீறல் “சூறாவளி”
ஆகாயத்தின் குமறல் “இடிமுழக்கம்”
அழிவுகளின் பயங்கரம் தீயால் வருவதுதான்...  எச்சங்களைக்கூட விட்டுவைக்காது...
இவை நாம் காலா காலமாய் கண்டுவந்த உண்மைகள்.

இன்றைய கால கட்டத்தில்....
இயற்கை அழிவுகளின் இன்னுமொரு பரிணாமத்தை நாம் சிந்தித்ததுண்டா?
இயற்கைக்கு சவாலாகவும்...
இயற்கையே சவாலாகவும் மாறும் கொடுமை...
“தாவரங்களின் அழிப்பு”

             மெய்ஞானம் வென்ற விஞ்ஞானம் கூறும் உண்மைகளுள் ஒன்றுதான்   “உலக வெப்பமாதல்” (GLOBAL WARMING)
இதற்குப் பிரதான காரணம் “காடழிப்பு”
அழிவது காடு மட்டுமல்ல... முழு உலகும்தான்...
கொடிய விலங்குகள் என நாம் வகுத்த எந்த மிருகமாவது இயற்கையை அழித்ததாக அறிந்ததுண்டா?
ஆறறிவுடைய நாம் மிருகத்தை விடவும் கொடியவர்களோ?
காட்டை அழித்து...
நாட்டை பிடித்து...
வானைப் பிழந்து...
தீயால் எரித்து...
காற்றில் கலந்து...
நீரிலும் நிலத்திலும் வானிலும் கபடங்கள் செய்யும் கயவர்கள் கூட்டமா இந்த மானிடப் பிறவி??
நம்மை மகிழ்விக்கும் இயற்கையை மகிழ்விக்க நாம் என்ன செய்திருக்கிறோம்??
மனிதர்கள் வணங்கிட இயற்கையில் பல தெய்வங்கள் உண்டெனக் கூறும் நாம்...
நம்மை வணங்கிட இயற்கையிடம் நல்லபடி நடக்க வேண்டாமா??

............... இது கவிதைக்கு ஒரு முடிவாக இருந்தாலும், நம் சிந்தனைக்கு ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்.........


By:   முகம்மட் நிப்ராஸ் I.L.
பொறியியல் பீடம்
பேராதனை பல்கலைக்கழகம்
+94-75-5483188

                                                                                                                                                                          Nifty creations©