Sunday, October 23, 2011

துன்பத்திலோர் துன்பம்...

காற்றடிக்கும் காலமெல்லாம் ...
காணல் நீர் காணக் கண்டான்...
பாலை எனும் மண்ணினிலே...
மாலை வரும் வேளை கண்டு...
மண்டியிட்டு அழுதவனுக்கு மணல் பாம்பு தீண்ட...
அழுதவன் ஓடோடிச்சென்றான் உதவி தேடி...
அங்கோர் தொலை தூரத்தே கண்ணுற்றான்... ஒரு மனிதன்...
துன்பத்திலும் ஓர் இன்பமோ என்றெண்ணி அவனை அழைக்க...
வந்தவனோ பாதகனாம்... பாவி இவன் உடமைதனை பாசமின்றிப் பறித்துச் செல்ல...
அந்தோ பரிதாபம்...
இவன் நிலைதனை என்னவென்று சொல்ல....


-நிப்ராஸ் முஹம்மட்.

No comments:

Post a Comment